Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மெலியா கெர் - ஐசிசி 2024-இன் சிறந்த டி20 வீராங்கனை!

2024-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனை விருதினை நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மெலியா கெர் வென்றுள்ளார்.
09:56 PM Jan 28, 2025 IST | Web Editor
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் சிறந்த ஒருநாள், டெஸ்ட், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகள்  தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

Advertisement

அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கவை சேர்ந்த லாரா, வோல்வார்ட் , நியூசிலாந்தை சேர்ந்த மெலியா கெர், இலங்கையை சேர்ந்த சாமாரி அதபத்து, அயர்லாந்தை சேர்ந்த ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ஆகியோரை பரிந்துரைத்தது.

அதன்படி, சிறந்த மகளிர் டி20 வீராங்கனையாக நியூசிலாந்து அணியின் மெலியா கெர்-ஐ வெற்றியாளராக ஐசிசி அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடி 387 ரன்களையும் மற்றும் 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

Tags :
awardCricketMelia KerrNewzlandT20
Advertisement
Next Article