Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"திருநெல்வேலியில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது மெகா உணவுப் பூங்கா" - திமுக எம்.பி. #KanimozhiSomu கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

02:02 PM Dec 03, 2024 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலியில் மெகா உணவுப் பூங்கா விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது என திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து அவை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறவில்லை. அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

அரசியலமைப்பு தொடர்பாக இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. இவ்வாறு தொடர் அமளி, இடையூறுகள் காரணமாக இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. இந்த சூழலில், திமுக எம்.பி. கனிமொழி சோமு, மெகா உணவுப் பூங்கா தொடர்பாக எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பினார்.

திமுக எம்.பி. கனிமொழி சோமு, "தமிழ்நாட்டில் உள்ள மெகா உணவுப் பூங்காக்களின் தற்போதைய நிலை என்ன? இந்த மெகா உணவுப் பூங்காக்களுக்காக செய்யப்பட்ட, பெறப்பட்ட மற்றும் பெறப்படும் மதிப்பிடப்பட்ட மொத்த முதலீட்டுடன், மாநிலத்தில் தற்போது செயல்படும் பூங்காக்களின் எண்ணிக்கை எத்தனை? தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மெகா உணவுப் பூங்காக்களை அமைக்க அரசு முன்மொழிகிறதா? அவ்வாறாயின், இதற்காக அடையாளம் காணப்பட்ட இடங்கள் மற்றும் இல்லையெனில், அதற்கான காரணங்கள் யாவை?" ஆகிய கேள்விகளை எழுப்பினார்.

இந்த கேள்விகளுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,

"மெகா உணவுப் பூங்காக்களுக்கான திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.77.02 கோடி மதிப்பில் மெகா உணவுப் பூங்காவிற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மெகா உணவுப் பூங்கா விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article