Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீட் இல்லாமல் மருத்துவப் படிப்பு.. மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம்!

10:11 PM Jul 19, 2024 IST | Web Editor
Advertisement

நீட் இல்லாமல் மருத்துவப படிப்பில் மாணவர்கள் சேரலாம் எனக்கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

கோவை சிங்காநல்லூர் பகுதியில் கே.எஸ்.ஜி அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப்
மெடிசன் என்ற நிறுவனம் போலியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும், அதில்
மாணவர்களை மருத்துவப் படிப்பதற்காக சேர்ப்பதில் பல கோடி ரூபாய் மோசடி
செய்துள்ளார்கள் எனவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணம் கொடுத்த மாணவர்களின் சார்பில் வழக்கறிஞர் ஜான்லி புகார் மனு அளித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“நீட் இல்லாமல் மருத்துவ படிப்பில் சேர இங்கு மூன்று ஆண்டுகளும், அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளும் பயிற்சி அளிக்கபடும் எனக்கூறி 40 முதல் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் இந்த நிறுவனம் ஏமாற்றி பணம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே 2021-ம் ஆண்டு ஓய்வு பெற்ற துணை ஆய்வாளர் நடராஜன் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாநகர குற்றவியல் அலுவலகத்தில் புகார் அளிக்க
வந்துள்ளோம். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து இரண்டு
முதல் மூன்று நாட்களில் புகார் அளிப்பர். குறிப்பாக கிராமப்புற மாணவர்களை குறி வைத்து ஏமாற்றி தலா ஒரு மாணவர்களிடமிருந்து ரூ. 50 முதல் 60 லட்சம் வரை ஏமாற்றி உள்ளனர்.  இதில் ஆரம்பத்தில் 5 முதல் 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் அவர்கள் ஆசையை தூண்டும் விதமாக விளம்பரங்கள் செய்து கவர்ந்துள்ளனர். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ சீட் வாங்கி தருவதாகவும் அதன்
பிறகு அமெரிக்கா மருத்துவ பல்கலைக்கழகத்தில் வாங்கித் தருவதாகவும் மாறி மாறி
கடந்த ஐந்து வருடங்களாக ஏமாற்றி வந்துள்ளனர்” என தெரிவித்தார்.

Tags :
fraudMedical CoachingNEETstudents
Advertisement
Next Article