Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#MBBS, BDS இடங்களுக்கான இறுதி ஓதுக்கீடு இன்று வெளியீடு!

08:35 AM Aug 30, 2024 IST | Web Editor
Advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு விவரங்கள் இன்று வெளியாகின்றன.  

Advertisement

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் இணையவழியாக பதிவு செய்து கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்வது கடந்த 27-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மேலும், இறுதி ஒதுக்கீட்டு உத்தரவுகளை பெற்றவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 7 ஆயிரத்து 628 மாணவர்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,806 மாணவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags :
AdmissionBDSMBBSstudents
Advertisement
Next Article