அதிகாரி மீது கோப்பையை வீசிய மேயர்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வடிகால் சுத்தம் செய்யும் பணியில் பொய்யான அறிக்கையை அளித்த அதிகாரிகள் மீது கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே கோபமடைந்தார்.
கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே, மழைக்காலத்திற்கு முன் வடிகால் சுத்தம் செய்யும் பணியை பரிசீலனை செய்வதற்காக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதையடுத்து, ஆய்வு கூட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அனைத்து கோப்பையும் சமர்ப்பிக்குமாறு மேயர் பிரமிளா பாண்டே உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அதிகாரிகள் அனைத்து கோப்பையும் மேயர் பிரமிளா பாண்டேயிடம் அளித்தனர்.
இந்நிலையில், அனைத்து கோப்பையும் மேயர் ஆய்வு செய்தார். இதில், மார்ச் மாத கோப்பில் பொய்யான அறிக்கை இருந்ததால் மேயர் கோபமடைந்து நிலையில், அந்த கோப்பை அதிகாரி மீது வீசினார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள் : குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் இன்று கொச்சின் கொண்டு வரப்படுகிறது - தனித்தனி வாகனங்களில் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல திட்டம்!
முனிசிபல் கார்ப்பரேஷன் மண்டலம் - 3 இன் வடிகால் சுத்தம் செய்யும் பணியின் மதிப்பு ஆய்வில் அதிகாரி பொய்யான அறிக்கையை அளித்ததால் மேயர் பிரமிளா பாண்டே ஆத்திரமடைந்தார். மேலும், இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டில், பச்சை மரங்களை வெட்டுவது குறித்து மெட்ரோ திட்ட அதிகாரிகளை பிரமிளா பாண்டே கண்டித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.