ஒருவேள இருக்குமோ... #CSKvsDC போட்டியை காணும் தோனி பெற்றோர்... அதிர்ச்சியில் உறைந்துள்ள ரசிகர்கள்!
சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஐபில் 2025 தொடரின் 17வது போட்டி சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் குவித்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது சென்னை அணி 184 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியை தோனியின் பெற்றோர்கள் பார்த்து வருகின்றனர். மேலும் தோனியின் மனைவி மற்றும் மகள் என அவரது குடும்பமே போட்டியை ரசித்து வருகிறது. தோனியின் பெற்றோர் இதுவரை ஊடக வெளிச்சத்திலிருந்து விலகியே இருந்தனர். இதனால் இது தோனியின் கடைசி சீசனாக இருக்குமோ என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
மேலும் சேப்பாக்கத்தில் தான் எனது கடைசிப் போட்டி இருக்கும் எனவும் தோனி குறிப்பிட்டிருந்தார். இதனால் எப்பொழுதும் சீசனின் முடிவில் ரசிகர்களுக்கு எழும் பயமானது இப்போது தொடரின் நான்காவது போட்டியிலேயே எழுந்துள்ளது.