Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரஜினியின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
08:43 AM Dec 12, 2025 IST | Web Editor
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
Advertisement

தமிழ் திரை உலகில் 50 ஆண்டுகளாக ஒரு சகாப்தமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினி தனது 75-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இதற்காக பல்வேறு தரப்பினர் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :
BirthadaywishesCHIEF MINISTERM.K. StaleyRajinikanthsuperStartrendingnews
Advertisement
Next Article