“அன்பு, கருணை, மகிழ்ச்சி நிலைத்து நீடித்திருக்கட்டும்” - தவெக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவை வரவேற்கும் விதமாக தேவாலயங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு, பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தவெக தலைவர் விஜய் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது;
“இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும். அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.