"அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும்" - தவெக தலைவர் விஜய் யுகாதி திருநாள் வாழ்த்து!
யுகாதி திருநாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
09:36 AM Mar 30, 2025 IST
|
Web Editor
Advertisement
இந்தியாவில், வெவ்வேறு மொழிகள், கலாச்சாரத்தின் அடிப்படையில் பல பண்டிகைகள் கொண்டாப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு ஒரே நாளில் கொண்டாடினாலும், இந்திய மாநிலங்களில், புத்தாண்டு கொண்டாட்டம் வேறுபடும். ஜோதிட ரீதியாக கிரகங்களின் பெயர்ச்சியில் அடிப்படையில், தமிழ் வருடப்பிறப்பு, தெலுங்கு வருடப்பிறப்பு, விஷு என்று சொல்லப்படும் மலையாள வருடப்பிறப்பு போன்றவை கொண்டாடப்படும். அந்த வகையில், யுகாதி என்று அழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு, இன்று (மார்ச் 30) கொண்டாடப்படுகிறது.
யுகாதி திருநாள் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கான புது வருடப் பிறப்பாகும். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கடவுளை வழிபட்டு இந்த நாளைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில்தான் பிரம்மா உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குமான தலை எழுத்தை எழுதியதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், யுகாதி திருநாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாக விஜய் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
Next Article