Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மழையால் போட்டி ரத்து... தொடரிலிருந்து வெளியேறியது கொல்கத்தா!

மழை காரணமாக கொல்கத்தா மற்றும் பெங்களுரு அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.
07:37 AM May 18, 2025 IST | Web Editor
மழை காரணமாக கொல்கத்தா மற்றும் பெங்களுரு அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.
Advertisement

நடப்பு ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றத்தால் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

இரு நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் புரிந்துணர்வு மேற்கொண்டதை அடுத்து சனிக்கிழமை (மே.17) முதல் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்தது. இதன் படி நேற்று பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடக்க இருந்தது.

ஆனால் நேற்று சின்னசாமி மைதானத்தில் பெய்த தொடர் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனால் பெங்களூரு அணி 12 போட்டிகளில் மொத்தம் 17 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. 13 போட்டிகளில் 12 புள்ளிகளைப் பெற்ற கொல்கத்தா அணி தொடரை விட்டு வெளியேறியது.

Tags :
IPL 2025kkrPlayoffsRCB
Advertisement
Next Article