"#Master என் மனதிற்கு நெருக்கமான படம்" - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி!
‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து இவர் 'கைதி' படத்தை இயக்கினார். இப்படம் இவருக்கு பெரும் பெயரை பெற்றுத்தந்தது. இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாஸ்டர்'.
இப்படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"மாஸ்டர் படமும், அதன் கதாநாயகனும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. இப்படத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றிய விஜய்க்கும், அனைவருக்கும் நன்றி. இந்த மறக்கமுடியாத பயணத்திற்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்"
இவ்வாறு இயக்குநர் லேகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார்.