ஹாங்காங் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து : 44 பேர் பலி..!
ஹாங்காங்கில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
07:59 AM Nov 27, 2025 IST
|
Web Editor
Advertisement
ஹாங்காங்கின் தை போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
Advertisement
இதில் 5 உயர்ந்த கட்டிடங்கள் முழுவதும் தீ பரவி எரிந்ததால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 29 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் 279 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. எனினும் சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Article