Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மார்வெலின் புதிய அவெஞ்சர்ஸ் திரைப்படம் - ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் 'கிங் தானோஸ்'

10:55 AM Aug 13, 2024 IST | Web Editor
Advertisement

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் சூப்பர் வில்லனாக இருந்து, ஹீரோக்களை துவம்சம் செய்த கதாபாத்திரமான கிங் தானோஸ்  புதிய அவெஞ்சர்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ளதாக மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் அறிவித்துள்ளது.

Advertisement

கடந்த 2008-ம் ஆண்டு 'அயர்ன் மேன்' திரைப்படத்திற்கு பின்னர் மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (எம்சியு) என்று சொல்லப்படும் மார்வல் சூப்பர் ஹீரோக்களின் திரைப்பட வரிசை ஆரம்பமானது.  இந்த வரிசையில்தான்  'ஹல்க்', 'தோர்', 'கேப்டன் அமெரிக்கா' என அடுத்தடுத்து சூப்பர் ஹீரோ படங்களை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல  வரவேற்பை பெற்றது.

 இதனைத் தொடர்ந்து 4வதாக வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படத்துடன் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் நான்காம் கட்டம் நிறைவடைந்தது. இதில் முக்கிய கதாபாத்திரங்களான அயர்ன்மேன், ப்ளாக் விடோ  இறந்து போனதால், அதில் நடித்திருந்த ராபர்ட் டவுனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹன்ஸன் ஆகியோர் மார்வெல் திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெற்றனர்.

அதேபோல கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால், அதில் நடித்த கிறிஸ் எவான்ஸ் மார்வெல் திரைப்படங்களிலிருந்து விலகினார். இந்த நிலையில் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் அடுத்த படத்திற்கான தயாரிப்புத் திட்டங்கள் மற்றும் நடிகர்களுடனான பேச்சுவார்த்தை குறித்து சமீபத்தில் செய்திகள் வெளியானது.

டிஸ்னிலேண்ட் கலிபோர்னியாவில் நடைபெற்ற டி23 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி டிபென்ஸ்' என்ற புதிய படத்தின் திட்டத்தை MCU  வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மார்வெல் ரசிகர்களுக்கு அதிரடி அனுபவத்தை அளிக்கும் வகையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை இந்த படத்தில் இணைத்துள்ளனர். அதாவது, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் சூப்பர் வில்லனாக இருந்து, ஹீரோக்களை துவம்சம் செய்த கதாபாத்திரமான கிங் தானோஸ் கதாபாத்திரம் மீண்டும் புதிய படத்தில் வர உள்ளது.

இதன்மூலம் சக்திவாய்ந்த வில்லனான கிங் தானோஸ் கதாபாத்திரம் 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி டிபென்ஸ்' படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் வரும் புதிய அவெஞ்சர்ஸ், கிங் தானோஸை எதிர்த்துப் போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த வீடியோக்கள் டி23 நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

Tags :
avengersKing ThanosmarvelMarvel StudiosMCUThanosThe Avengers
Advertisement
Next Article