சுப்மன் கில்லுடன் திருமணமா? - நடிகை ரித்திமா விளக்கம்!
சுப்மன் கில்லுடன் தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் உண்மை இல்லை என்று இந்தி டிவி சீரியல் நடிகை ரித்திமா பண்டிட் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரராக இருப்பவர் சுப்மன் கில். இவர் கடந்த 2019ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் வழிநடத்தினார். இதையடுத்து, டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் காத்திருப்பு வீரராக இடம் பிடித்துள்ளார்.
இதனிடையே சுப்மன் கில் மற்றும் இந்தி டிவி சீரியல் நடிகையான ரித்திமா பண்டிட் ஆகிய இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், திருமணம் குறித்து வெளியான இந்த தகவல் உண்மை இல்லை என ரித்திமா பண்டிட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரித்திமா பண்டிட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் என்னை சிறையில் அடைத்தீர்கள்? - அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி!
அதில் அவர் கூறியதாவது :
“எனக்கு நடக்க இருக்கும் திருமணம் குறித்து பத்திரிகையாளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். நான் இப்போது யாரையும் திருமணம் செய்யப்போவது இல்லை. திருமணம் போன்ற நல்ல நிகழ்வு நடப்பதாக இருந்தால், நானே உங்களுக்கு தெரிவிப்பேன்”
இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.