Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அனுமதி பெறாமல் செயல்பட்ட திருமண மஹால் - உரிய விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

01:31 PM Jun 12, 2024 IST | Web Editor
Advertisement

விதிகளை மீறி செயல்படும் தனியார் திருமண மஹாலின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள்,  உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டனர். 

Advertisement

நெல்லை மேலப்புத்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம்.  இவர் விதிகளை மீறி செயல்படும் தனியார் திருமண மஹாலின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் முன்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  தொடர்ந்து வாதங்களை  கேட்ட நீதிபதிகள்,  "உரிய அனுமதி பெறாமல் மஹால் செயல்படுகிறதா?" என கேள்வி எழுப்பினர்.  மேலும் மனுதாரர் அளித்த புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க   உத்தரவிட்டனர்.  தொடர்ந்து இந்த வழக்கையும் முடித்து வைத்தனர்.

Tags :
High Court Madurai BranceNellai
Advertisement
Next Article