#AirShow2024 | சென்னை மெரினாவில் லட்சக்கணக்கில் கூடிய மக்கள் - உயிரிழப்பு 5 ஆக உயர்வு!
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய விமானப்படை கடந்த 1932ம் ஆண்டு அக்.8ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று (அக். 6) மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பொதுமக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வருகை தந்தனர். அதன்படி இன்று நடந்த சாகச நிகழ்ச்சியில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதன் மூலம், இன்றைய நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் ‘உலகிலேயே அதிக நபர்கள் கண்டுகளித்த போர் விமான சாகச நிகழ்ச்சி’ என்ற சாதனை படைத்து இடம் பெற்றது.
இந்த நிகழ்ச்சியைக் காணவந்துவிட்டுத் திரும்பிய மக்கள் கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலில் திணறினர். நிகழ்ச்சி முடிந்து நான்கு மணி நேரத்திற்கு பின்னரே சென்னையின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட்டது. மேலும், ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதையும் படியுங்கள் : WT20WC | பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
இந்நிலையில், வெயிலின் தாக்கமும் இருந்ததால், சாகச நிகழ்ச்சியை காணவந்த சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. 93-திற்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 60 வயதான நபர் ஒருவர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, சென்னை திருவொற்றியூர் பகுதி சேர்ந்த கார்த்திகேயன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தை உடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும் போது வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவருடைய மனைவி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது கார்த்திகேயன் வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை நான்கு நபர்கள் உயிர் இழந்த நிலையில் தற்போது ஐந்தாவதாக ஒரு நபர் உயிரிழந்துள்ளார். பார்த்தசாரதி என்பவர் ஆர்ச் வழியாக நின்று கொண்டு வான்வழி சாகசங்களை கண்டு களித்துள்ளார். அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர்.ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டுகிறது.