Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கார்த்தியுடன் கைகோர்க்கும் மாரி செல்வராஜ்?

01:12 PM Aug 08, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Advertisement

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாழை' படம் இந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியாகிறது. நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜின் பெரிய லைன் அப் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பைசன் படத்தை விரைவில் முடிக்கவுள்ள மாரி செல்வராஜ் மீண்டும் தனுஷ் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தனுஷ் படத்தை முடித்த கையோடு நடிகர் கார்த்தியை வைத்து மாரி செல்வராஜ் ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் கார்த்தி வா வாத்தியார், மெய்யழகன் படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள், அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தொடர்ந்து சர்தார்-2விலும் நடித்து வருகிறார்.

Tags :
Cine UpdatesKarthimari selvaraj
Advertisement
Next Article