Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தும் மனு பாக்கர்?

07:50 AM Aug 04, 2024 IST | Web Editor
Advertisement

ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்றுள்ள நிலையில் 9-வது நாளான நேற்று (ஆக. 3) ஒரு பதக்கம் நழுவிப்போனது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிசுற்று நேற்று நடந்தது. தகுதி சுற்றின் மூலம் தேர்வான இந்தியாவின் மனு பாக்கர் உள்பட 8 வீராங்கனைகள் பதக்கத்துக்கு மோதினர்.

ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் பதக்கம் வென்று இருந்த அரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர் இந்த பிரிவிலும் பதக்கம் வென்று 'ஹாட்ரிக்' சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். முடிவில் மனு பாக்கரும், ஹங்கேரியின் வெரோனிகா மாஜேரும் தலா 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் சமனில் இருந்தனர். அவர்களில் யாரை வெளியேற்றுவது என்பதை முடிவு செய்ய தனியாக சூட்-ஆப் சுற்று நடத்தப்பட்டது.

இதில் இருவருக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டது. மனு பாக்கர் தனது வாய்ப்பில் 3 புள்ளி எடுத்தார். ஆனால் வெரோனிகா 4 புள்ளி எடுத்து டாப்-3 இடத்திற்குள் நுழைந்தார். மனு பாக்கர் 28 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார். 22 வயதான மனு பாக்கர் இந்த போட்டியிலும் பதக்கத்தை வென்று இருந்தால் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 3 பதக்கத்தை உச்சிமுகர்ந்த முதல் இந்தியர் என்ற புதிய சரித்திரத்தை படைத்திருப்பார்.

போட்டிக்குப் பின்னர், மனு பாக்கரிடம் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்ட போது, 'இது ஒரு வாழ்நாள் கவுரவமாகும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்' என்று மனு பாக்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :
#OlympicsIndiamanu BhakerNews7Tamilnews7TamilUpdatesOlympic GamesParis 2024shooting
Advertisement
Next Article