Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

லோகேஷ் கனகராஜை போருக்கு அழைத்த மன்சூர் அலி கான்..!

08:29 PM Oct 25, 2023 IST | Jeni
Advertisement

இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் போருக்கு அழைத்துள்ள நடிகர் மன்சூர் அலி கானின் பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியானது.

ரசிகர்களின் கலவையான விமர்சனங்களுடன் ‘லியோ’ திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இத்திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்ளின் பிளே-லிஸ்ட்டில் ரிபீட் மோடில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நடிகர் மன்சூர் அலி கானும் ‘லியோ’ திரைப்படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்திருந்தனர்.

இதையும் படியுங்கள் : இறுதிக்கட்டத்தில் 'தனுஷ் 50' படப்பிடிப்பு - விரைவில் பேக்-அப்..!

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலி கானின் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர், “500 கோடி முதல் போட்டு, லட்சம் பேருக்கு வேலை குடுத்து, ஒன்றை வருஷம் மெனக்கெட்டு, 1000 கோடி வசூலுக்கு பாடுபடுகிறோம்!. ஆனா, அரசியல்வாதி ஒரு கையெழுத்து போட்டுட்டு, 10,000 கோடி, 20 ஆயிரம் கோடி ஆட்டய போட்டுறான்!. லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல...

அதவுட்டுட்டு, 'தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு'. இல்லைனா வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி குடுக்கலாம்!. 500 மிலிட்டரி டேங்கர், 500 Armed air Craft எடுத்துட்டு வாங்க, போருக்கு போயி, எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சுட்டு வரலாம்!. அப்பாவிங்க சாகறாங்க... சும்மா, டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில குடுத்துக்கிட்டு....... வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ்!” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
IsraelLeoLeo FilmLokeshKanagarajMansoorAliKhanPalestinewar
Advertisement
Next Article