Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டனம்

09:12 AM Nov 19, 2023 IST | Web Editor
Advertisement

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சுக்கு  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த மாதம் 19-ந் தேதி வெளியானது. த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், மன்சூர் அலி கான் விஜயின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் லியோ படம் உலகளவில் 500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.

மேலும் அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் வரிசையில் 3-வது இடம் லியோ படத்திற்கு கிடைத்துள்ளது. இதனிடையே சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலி கான்,  த்ரிஷா குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார்.

மன்சூர் அலிகானின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தற்போது நடிகை த்ரிஷா மன்சூர் அலி கான் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது எக்ஸ்  பக்கததில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில், சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னை பற்றி அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ பதிவு ஒன்று என் கவனத்திற்கு வந்தது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது அவமரியாதையான பெண் வெறுப்புமிக்க பாலியல் அத்துமீறல் பேச்சு. அவர் இதற்கெல்லாம் ஆசைப்படலாம். ஆனால் இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையை பகிர்ந்துகொள்ளாததற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இதை தொடர்ந்து இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இந்த விவகாரத்தில் ட்வீட் செய்துள்ளார். த்ரிஷாவின் ட்வீட்டை ரிட்வீட் செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "மன்சூர் அலி கான் கூறிய கருத்துக்கள் மோசமானதாகவும் கோபமடைய வைப்பதாகவும் இருக்கிறது. பெண்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும்.

இதைச் சமரசம் செய்து கொள்ளவே முடியாது. அவரது இந்த பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி, மன்சூர் அலிகானின் ஆபாசமான பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Next Article