புதிய ராணுவத் தலைமை தளபதியாக உபேந்திர திவேதி இன்று பதவியேற்பு!
இந்திய ராணுவத் தலைமை தளபதியாகப் பொறுப்பு வகித்த மனோஜ் பாண்டே ஓய்வு பெற்ற நிலையில், புதிய ராணுவ தளபதியாக உபேந்திர திவேதி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியான மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
ராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றி வந்த லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை, அடுத்த ராணுவ தளபதியாக நியமித்து கடந்த 12-ந்தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ராணுவ துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, நாட்டின் 30வது ராணுவ தலைமை தளபதியாவார். இவர் ராணுவத்தில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “சைதாப்பேட்டை சிறுவன் உயிரிழப்பு- நாளை முதல் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு ORS பவுடர் வழங்கப்படும்”” – பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் பேட்டி
1964ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி, பிறந்த திவேதி, டிசம்பர் 1984 இல் ராணுவத்தின் காலாட்படையில் (ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்) இணைந்தார். இந்திய ராணுவத்தில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். ரெஜிமென்ட் (18 ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்), பிரிகேட் (26 பிரிவு அசாம் ரைபிள்ஸ்), டிஐஜி, அசாம் ரைபிள்ஸ் (கிழக்கு) மற்றும் 9 கார்ப்ஸ் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன், டைரக்டர் ஜெனரல் காலாட்படை மற்றும் 2022-2024 வரையிலான Northern Command தலைமையகத்தின் தலைமைப் பொது அதிகாரி உள்ளிட்ட முக்கியமான பதவிகளை வகித்துள்ளார்.