Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

21 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலிஸாகும்”மன்மதன்" திரைப்படம்!

நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ”மன்மதன்”திரைப்படம் ரீ-ரிலிஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
04:12 PM Jan 22, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மிகப் பிரபலாமன நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

இவர் தற்போது நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி இருக்கும்”தக் லைப்”படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மேலும்,சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 3ம் தேதி நடிகர் சிலம்பரசன் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளையொட்டி, இவர் நடிப்பில் வெளியாகி மாபெறும் வெற்றி பெற்ற ”மன்மதன்” திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்தார். கிட்டதட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு”மன்மதன்”திரைப்படம் ரீ-ரிலிஸ் செய்யப்பட இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :
Actor SimbuJothikamanmadhanmovieNews7Tamilnews7TamilUpdatesRelease
Advertisement
Next Article