இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர்!
விடுதலை பாகம் 2-ல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு நன்றி தெரிவித்து நடிகை மஞ்சு வாரியர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் நேற்று (டிச.20) வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
விடுதலை 2 முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகியது. இதில் நடிகை மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டா பக்கத்தில் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் விடுதலை 2 யில் "மகாலட்சுமி கதாபாத்திரத்திற்கு நன்றி வெற்றிமாறன் சார் எனவும் தற்போது திரையரங்குகளில் விடுதலை -2 எனவும் குறிப்பிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.