மாஞ்சோலை விவகாரம் | புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக் குழு அமைப்பு!
08:16 AM Aug 30, 2024 IST
|
Web Editor
அந்த குழு கள நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தி, அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
Advertisement
புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
Advertisement
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் மற்றும் ஆணையத்தின் நீதிபதி விஜயா பாரதி சயானியை கடந்த 20ஆம் தேதி நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார்.
புதிய தமிழகம் கட்சி முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவின் தலைமை இயக்குநர் அடங்கிய அதிகாரிகளை கொண்ட குழுவை நியமித்துள்ளது.
Next Article