"தவெகவின் சாதிவாரி கணக்கெடுப்பும், கூட்டணி ஆட்சியும் பிடித்துள்ளது" - காங். எம்.பி. #ManickamTagore பதிவு!
தவெக கொள்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இடம்பெற்றிருந்த எனக்குப் பிடித்திருந்தது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று (அக். 27) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ரிமோட் மூலம் மேடையில் இருந்தே 100 அடிக் கம்பத்தில் கொடியேற்றினார். பின்னர் தொண்டர்களிடையே பேசிய அவர் அரசியல், தங்களின் அரசியல் நிலைப்பாடு, கட்சியின் கொள்கை, கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசினார். பெண்களை கொள்கைத் தலைவர்களாக கொண்டு இயங்கும் ஒரே கட்சி தவெக தான் எனவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : “கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” – #EPS வலியுறுத்தல்!
பேச்சுக்கு நடுவே பல கட்சிகளையும் மறைமுகமாக சாடினார். பிளவுவாத அரசியல், திராவிட மாடல், நீட் எதிர்ப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு என முதல் மாநாட்டிலேயே அரசியல் பிரச்னைகள் குறித்து பேசினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் இருக்கும் இந்த காலகட்டத்தில், என்ன காரணத்துக்காக தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்பதை விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். இதையடுத்து, நம்முடன் இணைந்து களம் காணுவோருக்கும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு உண்டு என கூட்டணி குறித்து தவெக தலைவர் விஜய் பேசினார். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் கட்சியின் கொள்கையின் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜயின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் ஆதரித்தும் வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது" என தெரிவித்துள்ளார்.