Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘மணி...மணி...மணி...’ - ரீரிலீஸ் ஆகும் ‘மங்காத்தா’!

03:20 PM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற  ‘மங்காத்தா’ திரைப்படத்தை படக்குழு ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. 

Advertisement

கடந்த 2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் குமார்,  அர்ஜூன்,  த்ரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மங்காத்தா.  அக்காலகட்டத்தில் சிறிய பின்னடைவில் இருந்த நடிகர் அஜித்துக்கு அவரின் 50-வது படமான மங்காத்தா மாபெரும் வெற்றியாக அமைந்தது.  கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் மங்காத்தா.

அஜித் வரும் காட்சிகள் முழுவதும் பின்னணி இசையில் யுவன்சங்கர் ராஜா அதிர வைத்திருப்பார்.  இன்றைக்கும் மங்காத்தா படத்தின் பின்னணி இசைக்கு பெரும் ரசிகர்கள் உண்டு.  தற்போது கடைசியாக அஜித்தின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் துணிவு. அதனைத் தொடரந்து விடாமுயற்சியில் நடித்து வருகிறார்.  விடாமுயற்சி படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி,  மங்காத்தா படத்தை ரீ-ரிலிஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.  இச்செய்தி அஜித் ரசிகர்களிடையே மாபெரும் கொண்டாத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ajithArjunMankathaRe-releasevenkat prabhu
Advertisement
Next Article