Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை; பக்தர்களின் வருகை அதிகரிப்பு - முக்கிய பகுதிகளில் போக்குவரத்து இயக்கம் தடை!

08:47 AM Dec 24, 2023 IST | Web Editor
Advertisement

 சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று காலை  முதலே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால்,  மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து இயக்கம் தடை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது.  மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்ட வண்ணம் உள்ளனர்.

இதையும் படியுங்கள் : சீனாவில் நிலநடுக்கம் – உயிரிழப்பின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜை வரும் 27ஆம் தேதி
நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று காலை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் சுமார் 97,000 ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

இன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். புல்மேடு வனபாதை வழியாகவும் பக்தர்கள் கூட்டம் வருகை அதிகரித்துள்ள நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க, பம்பையில் கட்டுப்பாடு மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து சபரிமலை கோயிலுக்கு போக்குவரத்து இயக்கம் தடை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

Tags :
AyyappanTempledevoteesKeralamandalapoojaiSabarimalaSamiDarshanam
Advertisement
Next Article