Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்!

10:44 AM Mar 03, 2024 IST | Web Editor
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் மாசி கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று.  தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் இருந்து பெண் பக்தர்கள் இருமுடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.  இங்கு வருடந்தோறும் மாசி கொடை விழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.  தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ள நிலையில், 10-ம் நாள் சிறப்பு வாய்ந்த ஒடுக்கு பூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.  இந்த நிலையில் இன்றைய கொடியேற்ற நிகழ்வில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உட்பட,  தமிழ்நாடு கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags :
Bhagavathi Amman TempledevoteesfestivalKANNIYAKUMARIMandaikadutamilisai soundararajanVijay vasanth
Advertisement
Next Article