Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் | 40 லட்சம் பார்வைகளை கடந்த #Manasilaayo பாடல்!

11:23 AM Sep 10, 2024 IST | Web Editor
Advertisement

வேட்டையன் திரைப்படத்தின் மனசிலாயோ பாடல் வெளியான 18 மணி நேரங்களில் 40 லட்சம் பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

Advertisement

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கடந்த சில வாரங்களாக இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று முன்தினம் (செப். 8) வெளியானது. முழு பாடல் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த பாடல் ஏஐ மூலம் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலில் உருவாகி உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ஏஐ உதவியுடன் பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று யூடியூபில் வெளியான இப்பாடல் 18 மணி நேரங்களில் 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் யூடியூப் மியூசிக் டிரெண்டிங்கில் முதல் இடத்திலும் உள்ளது. மலையாளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அஜகஜந்திரம் என்ற படத்தில் வரும் ஓலுலேரு பாடலின் காப்பி எனவும், கேட்பதற்கு இரண்டு பாடல்களுமே ஒரே பீட்டில் வருவது போல தெரிவதாகவும் சினிமா பிரியர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
anirudhfirst singleManasilayoManju WarriorNews7TamilRajinikanthTG GnanaveltrendingYoutube
Advertisement
Next Article