ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் - காவல்துறை உடனடி நடவடிக்கை!
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்தார். வேலூர் கே.வி.குப்பம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு நபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அந்தப் பெண் கத்திக் கூச்சலிட்டுள்ளார்.
கர்ப்பிணி பெண் குரல் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் அந்த நபர்கள் அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கர்ப்பிணி பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஹேமராஜ் என்பவரை கைது செய்துள்ளனர். கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டதில் கை, காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹேமராஜ் ஏற்கெனவே பல பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.