Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி! - கதாநாயகி யார் தெரியுமா?

03:11 PM Jun 16, 2024 IST | Web Editor
Advertisement

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement

நடிகர் மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வெளியான 'டர்போ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால்,  இந்த திரைப்படம் சுமார் ரூ.80 கோடி வரை வசூலித்தது. இதற்கிடையே, நடிகர் மம்மூட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் கதை கேட்டதாகவும் அது அவருக்குப் பிடித்துப்போக தன் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதையும் படியுங்கள் : பயணிகள் கவனத்திற்கு… பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!

தற்போது, இவர்கள் இணைய உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் சென்னையில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு இந்த திரைப்படத்தில், நடிகை சமந்தா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படம் காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதையாக இருக்கும் என்றும் மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான நண்பகல் நேரத்து மயக்கம், ரோர்ஸார்ச், கண்ணூர் ஸ்குவாட், காதல் தி கோர் உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
cinema updateGautham Menonheroinemammoottymoviesamantha
Advertisement
Next Article