Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்த மம்தா பானர்ஜி!

03:30 PM Apr 27, 2024 IST | Web Editor
Advertisement

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்ததில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் நெற்றிப் பகுதியில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதியன்று,  கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அவருக்கு நெற்றியில் 3 தையல் மற்றும் மூக்கில் 1 தையல் போடப்பட்டதாகவும்,  பின்னால் இருந்து தள்ளியதால் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய் தெரிவித்தார்.  இது சர்ச்சையை கிளப்பியது.  பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய், "எங்கள் அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம்.  பின்னாலிருந்து தள்ளப்பட்டது போல உணர்வு இருந்ததால் அவர் மயங்கி விழுந்திருக்கலாம் என்றே சொன்னோம்.  ஒரு நபர் நிலை தடுமாறி கீழே விழும்போது இவ்வாறு நிகழ்கிறது”  என்று கூறினார்.

இந்த நிலையில்,  ஹெலிகாப்டரில் அமரும்போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  கால் தவறி இருக்கைக்கு அருகே விழுந்தார்.  அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கீழே விழுந்த அவரை உடனடியே தூக்கி விட்டார்.  இருப்பினும்,  மம்தாவுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

Tags :
Mamata banerjeeWest bengal
Advertisement
Next Article