Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து - எதிர்காலத்தில் யுபிஎஸ்சி எழுதவும் தடை!

04:49 PM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

முறைகேடு புகார்களில் சிக்கிய பூஜா கேட்கரின் ஐஏஎஸ் அதிகாரியின் தேர்ச்சியை,  ரத்து செய்து, எதிர்காலத்தில் அவர் குடிமை பணி தேர்வுகளை எழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அண்மையில் நீட், க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்விலும் முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மகாராஷ்டிராவை சேர்ந்த பூஜா கேட்கர்  பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் விசாரணையில் உள்ளன.

புனே மாவட்டத்தில் பணியாற்றிய போது தனது சொந்த வாகனத்தில் அரசு ஊழியருக்கான அடையாள பலகை வைத்தது, சைரன் பொருத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மேலும், ஐஏஎஸ் தேர்விலும் சலுகைகளை பெற தனது குடும்ப வருமானத்தை மறைத்து ஓபிசி சான்றிதழ் வழங்கியது மற்றும் உடல் குறைபாடு கொண்டவர் என போலி ஆவணம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைத்து விசாரித்து வருகிறது.

இதையும் படியுங்கள் : கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு – இணையத்தில் வைரல்!

இந்த நிலையில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. தனது பதவியைத் தவறுதலாகப் பயன்படுத்திய புகாரில், மகாராஷ்டிர அரசு அவரைப் பதவி நீக்கம் செய்தது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, அவரின் தேர்ச்சியை, யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது. எதிர்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
appearingbarredcanceledcivil service examsias officermalpracticeOBCnon_creamylayerquotaPujaKhedkarTraineeIASOfficerUnionGovernment
Advertisement
Next Article