Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ!

08:45 PM Apr 17, 2024 IST | Web Editor
Advertisement

சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலன்’ படத்தின் சிறிய டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

தமிழ் திரையுலகின் தனித்துவமான பாணியில் நடிக்கும் நடிகர் சீயான் விக்ரம் அவர்களின் நடிப்பில் உருவான 'தங்கலான்' எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அவரின் 58 ஆவது பிறந்த நாளான இன்று தங்கலான் படத்திற்காக அவர் தன்னை உருமாற்றிக் கொண்ட விதம் குறித்த காணொளி வெளியிடப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்பு துரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் பின்னணியில் உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த அட்வென்சர் பீரியாடிக் ஜேனரிலான திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதி தேஷ் பாண்டே மற்றும் கே ஈ. ஞானவேல் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தற்போது இப்படத்தில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு பரிசளிக்கும் வகையில் 'தங்கலான்' திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக உருமாற்றம் செய்து கொண்ட சீயான் விக்ரமின் கடின உழைப்பை விவரிக்கும் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இது சீயான் விக்ரமின் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமான முறையில் படமாளிகையில் திரையிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

 

Tags :
Chiyaan Vikramthangalaanvikram
Advertisement
Next Article