Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அதிக ஒலி எழுப்புவதா?” - தனியார் பேருந்து ஓட்டுநரிடம் இயக்குநர் சேரன் வாக்குவாதம்!

09:34 PM Aug 13, 2024 IST | Web Editor
Advertisement

கடலூர் அருகே அச்சுறுத்தும் விதத்தில் அதிக ஒலி எழுப்பிய தனியார் பேருந்து ஓட்டுநரிடம் நடிகரும் இயக்குனருமான சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே 150-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. சராசரியாக இரண்டு முதல் மூன்று நிமிட இடைவெளியில் அதிக பேருந்துகள் இயக்கப்படுவதால், பேருந்து ஓட்டுநர்கள் ஏர் ஹாரன் பயன்படுத்தி அதிக ஒலி எழுப்பி அதிவேகமாக மற்ற வாகனங்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக தினசரி பேருந்துகளை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஆக. 13) புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்னால் நடிகரும் இயக்குனருமான சேரன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் அதிக அளவு சத்தத்துடன் ஒலி எழுப்பிக் கொண்டே வந்ததார்.

இதனால் ஆத்திரமடைந்த சேரன் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அதிக ஒலி எழுப்பிய பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஒதுங்குவதற்கும், வழி விடுவதற்கும் இடமில்லாத இடத்தில் தொடர்ந்து இவ்வாறு சக வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக பேருந்துகளை இயக்கும் பேருந்துகள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
CherancuddloredirectorNews7Tamilnews7TamilUpdatesprivate busPuducherry
Advertisement
Next Article