பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் குழப்பம்? மகளிர் உரிமை தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே என கூறும் ரேசன்கடை ஊழியர்கள்- பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகளிர் உரிமை தொகை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே போல இந்த ஆண்டும் அரசின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப
அட்டைதார்களுக்கும் 1000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய 4 பொருட்கள் அடங்கிய
பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதற்கான டோக்கன்கள் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் அனைத்து அரிசி குடும்ப
அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த நிலையில் நேற்று ( ஜன.07) முதல் தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்ய தொடங்கியது.
இதையும் படியுங்கள் : அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கான பந்தல்கால் நடும் விழா கோலாகலம்!
இந்நிலையில், இன்று (ஜன. 08) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காண டோக்கன் பெறுவதற்கு ஏராளமான
பொதுமக்கள் சென்ற நிலையில் அங்கிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் மகளிர் உரிமை தொகை பெறுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் மற்றவர்களுக்கு வழங்கப்படாது எனவும் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் ரேஷன் கடை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தருவதாக கூறிவிட்டு குறிப்பிட்ட அட்டைதாரர்களுக்கும் தருவது மக்களை ஏமாற்றம் செயல். மேலும்,
அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புகள் தரவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.