“பெரும்பான்மையினர் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டும்” - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொல்கத்தா ரெட் சாலையில் ரமலான் பண்டிகை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாகவது, “நாங்கள் மதச்சார்பற்றவர்கள். நவராத்திரி நடந்து கொண்டிருக்கிறது, அதற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கலவரங்கள் நடக்க நாங்கள் விரும்பவில்லை. கலவரங்களில் சாதாரண மக்கள் ஈடுபடுவதில்லை; அரசியல் கட்சிகள் மட்டுமே ஈடுபடுகின்றன. இது அவமானமானது. லால் கம்யூனிஸ்ட் கட்சி மதச்சார்பின்மை பற்றி அறிக்கைகளை வெளியிட்டது. இன்று, சிவப்பு மற்றும் காவி ஒன்றிணைந்துள்ளது.
நாங்கள் தனியாகப் போராடுவோம். அனைத்து மதங்களுக்காகவும் எங்கள் உயிரைத் தியாகம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். பெரும்பான்மையினர் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டும், சிறுபான்மையினர் பெரும்பான்மையினருடன் இருக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா மாவட்டத்தின் மொதபாரி பகுதியில் கடந்த மார்ச் 27ஆம் தேதி இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, வாகனங்கள் தீ வைக்கப்பட்டு பதற்றமான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாரால் அங்கு குவிக்கப்பட்டு 61 பேரை கைது செய்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.