Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து..!

வங்கதேசம் தலைநகர் டக்காவில் அமைந்துள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
06:52 PM Oct 18, 2025 IST | Web Editor
வங்கதேசம் தலைநகர் டக்காவில் அமைந்துள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Advertisement

வங்கதேசம் தலைநகர் டக்காவில் அமைந்துள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் றக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சேமித்து வைக்கும் சரக்கு முனையத்தில் தீ பிடித்துள்ளது.

Advertisement

இதனை தொடர்ந்து விமான நிலைய தீயணைப்புத் துறை, பங்களாதேஷ் விமானப்படை தீயணைப்புப் பிரிவு உள்ளிட்டோர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து காரணமாக விமான நடவடிக்கைகள் அனைத்தும்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாக இயக்குனர் SM ரகிப் சமத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தால் ஏற்பட்ட  சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. மேலும் விமான நிலைய அதிகாரிகள்  தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையில் ஈட்பட்டுள்ளனர்.

 

Tags :
BangaladeshDhaka AirportfireaccidentHazrat Shahjalal International AirportlatestNewswordnews
Advertisement
Next Article