Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூர்யா 44 திரைப்படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள் - யார்.. யார் தெரியுமா?

08:40 PM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement

சூர்யா 44 திரைப்படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

நடிகர் சூர்யாவின் 44வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் அந்தமானில்  தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூர்யா 44 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைய உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது அவர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் இணைந்துள்ளார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அந்தமானில் உள்ள போர்ட் பிளேரில் படப்பிடிப்பு தொடங்குவதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. இந்த நிலையில் சூர்யா 44 திரைபடத்தில் நடிகர்கள் ஜெயராம், கருணாகரன் ஆகியோரும் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags :
GeorgeJayaramJoju GeorgeKarthik SuburajPooja HegdeSurya 44
Advertisement
Next Article