Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை தெரியுமா?

08:27 AM Jul 20, 2024 IST | Web Editor
Advertisement

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் உள்ள சில பகுதிகளில் இன்று (20.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Advertisement

மக்கள் அனைவருக்கும் மின்சார தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளது.  இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன்படி, சென்னை நகரின் சில பகுதிகளில் இன்று (ஜூலை 20) மின்வாரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்..

இதன்படி, ஆவடி, அம்பத்தூர், அண்ணாசாலை, சோழிங்கநல்லூர், போரூர், வியாசர்பாடி, அம்பத்தூர், பொன்னேரி, பல்லாவரம், அடையார், ஐ.டி.காரிடர், மதுரவாயல், ஐ.டி.சி, கிண்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதனால் மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துக்கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

Tags :
ChennaiElectricityPowerCuttamil naduTANGEDCOTNEB
Advertisement
Next Article