Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#MahaVishnu யூடியூப் பக்கத்திலிருந்து ஆசிரியர் சங்கர் தொடர்பான வீடியோ காட்சிகள் நீக்கம்!

09:54 AM Sep 09, 2024 IST | Web Editor
Advertisement

மகாவிஷ்ணுவின் பரம்பொருள் பவுண்டேஷன் யூடியூப் பக்கத்திலிருந்து மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை அவமதித்து பேசிய வீடியோ காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

சென்னையில் உள்ள இரண்டு அசோக் நகர் மற்றும் சைத்ஜாப்பேட்டை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக, பள்ளி நிர்வாகம் மகாவிஷ்ணு என்பவரை சிறப்பு விருந்தினராக அழைத்தனர். ஆனால், அவர் மாணவர்களிடையே மூட நம்பிக்கையை விதைக்கும் வகையில் ஆன்மிக ரீதியாக பேசினார். குறிப்பாக அசோக் நகர் பள்ளியில் பேசும் போது, போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் இந்த ஜென்மத்தில் மாற்றுதிறனாளிகளாக பிறந்துள்ளனர் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதனால் அப்பள்ளியின் மாற்றத்திறனாளியான தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஸ் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை அங்கிருந்தே சைதாப்பேட்டை போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. விசாரணையில், “எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளை நல் வழிப்படுத்தும் நோக்கிலேயே பேசினேன். இதுபோன்று பல இடங்களில் நான் பேசி இருக்கிறேன்” என கூறினார். நேற்றும் அனைத்து மாற்றுத்ததிறனாளிகள் சங்கம் அளித்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மகாவிஷ்ணுவுடைய பரம்பொருள் பவுண்டேஷன் யூடியூப் பக்கத்திலிருந்து, ஆசிரியர் சங்கரை அவமதித்து பேசிய காணொளி காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tags :
ChennaiMaha vishnuSchoolsshankarYoutube
Advertisement
Next Article