Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#MaharastraAssemblyElection | தபால் வாக்கை செலுத்திவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்ட காவலர் மீது வழக்கு!

07:56 AM Nov 18, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்கை செலுத்திய காவலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக – ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து மகாயுதி எனும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் ஒன்றிணைந்து மகா விகாஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.

மகராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.  இதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள். இதில் 43 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 38 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 81, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களில் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரே சிவசேனா 95, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களில் களம் காண்கின்றன. 237 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி 200 இடங்களிலும் ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தனித்து 125 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. நாளை மறுநாள் மஹராஷ்டிரா மாநிலத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஜார்கண்ட் மாநிலத்திலும் இன்று பிரசாரம் ஓய்ந்து நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் கணேஷ் ஷிண்டே எனும் காவலர் அஸ்தி தொகுதிக்கான தபால் ஓட்டை மலபார்ஹில் வாக்குப்பதிவு மையத்தில் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு சீட்டை படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.

இதுதொடர்பாக மலபார்ஹில் தேர்தல் அதிகாரியிடம் புகார் வந்தது. இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி வாக்கு சீட்டை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த காவலர் கணேஷ் ஷிண்டே மீது காவ்தேவி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப்புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
assembly electionbookedMaharastra Electionpostal vote
Advertisement
Next Article