அயோத்தியை போல் தத்ரூபமாக 11 அடி உயரத்தில் வீட்டில் ராமர் கோயிலை கட்டிய நாக்பூர் பொறியாளர்!
ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு, நாக்பூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் 11 அடி நகலை தனது இல்லத்தில் உருவாக்கி உள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இதையும் படியுங்கள் : புழல் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து – பல மணி நேரமாக போராடும் வீரர்கள்!
அதனைத் தொடர்ந்து, ஜனவரி 22 அன்று ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு,
நாக்பூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் 11 அடி நகலை தனது இல்லத்தில் உருவாக்கி உள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் நகலை உருவாக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் நகலை 11 அடியில் தனது இல்லத்தில் உருவாக்கியுள்ளார்.