Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#PMModi திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை... 8 மாதங்களில் உடைந்து விழுந்ததால் பரபரப்பு!

08:11 PM Aug 26, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிராவில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை இன்று இடிந்து விழுந்தது.

Advertisement

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 4ம்தேதி கடற்படை தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயர சிலை இன்று மதியம் 1 மணியளவில் திடீரென உடைந்து விழுந்தது.

அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.  இந்த நிலையில், சிலை உடைந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து, சேதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். சிலை உடைந்ததற்ககு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல்,  "சிலைக்கான தரத்தில் பெரிய அளவில் மராட்டிய அரசு கவனம் செலுத்தவில்லை" என குற்றச்சாட்டுக்களை தெரிவித்து உள்ளார். சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.எல்.ஏ. வைபவ் நாயக்கும், சிலையின் தரம் பற்றி அரசை விமர்சித்து உள்ளார். எனினும், இதுபற்றி முழு அளவில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அதே இடத்தில் புது சிலை அமைப்போம் எனவும் அமைச்சர் தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.

Tags :
MaharashtraNarendra modiPM ModiShivaji StatueStatue Collapses
Advertisement
Next Article