Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஷ்டிரா | செல்ஃபி மோகத்தால் 100 அடி பள்ளத்தில் விழுந்த பெண்!

05:31 PM Aug 04, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிரா சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெண்ணை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

Advertisement

பிரபலமடைவதற்காக அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்கும் நடைமுறை சமீபத்தில் அதிகரித்து உள்ளது.  இவை, பெரும்பாலும் துயரமான சம்பவங்களில் முடிவடைகிறது. இது போன்ற சம்பவம் தற்போது நடந்துள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சியை காண்பதற்காக புனே பகுதியை சேர்ந்த சிலர் குழுவாக சுற்றுலா சென்றனர்.

கனமழை காரணமாக நீர்வீழ்ச்சி மூடப்பட்டுள்ளதால், நஷ்ரீன் அமீர் குரேஷி என்ற பெண் அருகில் இருந்த போர்ன் காட் என்ற இடத்திற்கு சென்று செல்ஃபி எடுத்துள்ளார்.  அப்போது அவர் கால் தவறி 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைய அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் அப்பெண்ணை உயிருடன் மீட்டனர்.  இதில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
hospitalMaharashtraselfietreatmentViral
Advertisement
Next Article