Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகா கும்பமேளா துயரம் - இழப்பீடு கோரி நீதிமன்றத்தை நாடும் நிலை!

மகா கும்பமேளா துயரம் தொடர்பாக இழப்பீடு கோரி நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
06:51 PM Jun 09, 2025 IST | Web Editor
மகா கும்பமேளா துயரம் தொடர்பாக இழப்பீடு கோரி நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement

உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 முதல், பிப்ரவரி 26 வரை கோலாகாமாக மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்றது. இதனிடையே அங்கு மௌனி அமாவாசையான ஜனவரி 29ஆம் தேதி ஏராளமான பக்தர்கள் புனித  நீராட அங்கு குவித்தனர். இதனால் கூட்ட நெரில் ஏற்பட்டு 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து அம்மாநில அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் கும்பமேளாவில் மனைவியை இழந்த உதய் பிரதாப் சிங் என்பவர் அரசு அறிவித்த இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு  நீதிபதிகள் சௌமித்ரா தயாள் சிங், சந்தீப் ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாநில அரசு “அக்கறையின்மை” உடன் இருப்பதாக கண்டனம் தெரிவித்து விளைவை உணர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகுந்த கருணையுடனும் கண்ணியத்துடனும் இழப்பீடு வழங்குவது அரசின் கடமை எனக் கருத்து தெரிவித்து, வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை 18 ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

மேலும்  கும்பமேளாவில் முழு அதிகாரமும் அரசிடம்தான் இருந்தது. இறந்தவர் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறி இறந்தவர்களின் விவரங்கள், அவர்களுக்கு செலுத்தப்பட்ட, செலுத்தப்பட வேண்டிய இழப்பீடு தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags :
Allahabad HCMaha Kumbh 2025uttar pradesh
Advertisement
Next Article