Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் ஶ்ரீ அமிர்தாம்பிகை உடனாய ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரர் கோயிலில் மஹாகும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
01:39 PM Apr 23, 2025 IST | Web Editor
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அமிர்தாம்பிகை உடனாய புளிப்புரை ஈஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு புதியதாக விமானமண்டபம், மஹாமண்டபம் மற்றும் விநாயகர், முருகர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, ஆதிநாதர், அகஸ்தியர், லோபா முத்திரை, சண்டிகேஸ்வரர், பைரவர், நந்தீஸ்வரர் மற்றும் நவகிரக சன்னிதிகள் புதியதாக கட்டி முடிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் ஶ்ரீ அமிர்தாம்பிகை உடனாய ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை காலை விநாயகர் பூஜையும் மாலை முதல்கால யாக ஹோமத்துடன் மஹா கும்பபாபிஷேகம் நிகழ்ச்சி துவங்கியது .

இதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் இரண்டாம் கால ஹோம பூஜையும், அமிர்தாம்பிகை உடனாய புலிப்புரை ஈஸ்வரர் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு விஷேச த்ரவ்ய ஹோமம் பூர்ணாஹீதி நடைப்பெற்றது. நேற்று மாலை மூன்றாம் காலஹோமம் யாக பூஜையும், இன்று காலை நான்காம் கால யாகஹோமம் பூஜை நடைப்பெற்றது.

பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் புறப்பாடு கோயிலை சுற்றி வந்து ஆலய விமான மண்டப கலசத்திற்கு புனித நீர் ஊற்றி பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷம் முழுங்க மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. தொடர்ந்து பரிவாரா மூர்த்திகளுக்கும் இறுதியாக கருவறையில் அமர்ந்துள்ள மூலவர் அருள்மிகு ஶ்ரீ அமிர்தாம்பிகை உடனரை புளிப்புரை ஈஸ்வரருக்கு மஹாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்பு பாலாபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags :
chengalpatudevoteesMaha KumbabhishekamparticipateSri Pulipurai EaswaranTemple
Advertisement
Next Article