Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலக அமைதி வேண்டி மதுரையில் 108 வீணை இசை வழிபாடு!

10:23 AM Oct 25, 2023 IST | Student Reporter
Advertisement
மதுரை வெங்கடேச பெருமாள் கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும், வீணை இசைக்கலை வளர வேண்டியும் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.

மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன
வெங்கடேச பெருமாள் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும் வீணை இசைக்கலை வளர வேண்டியும் மதுரை வீணைக் கலைஞர்கள் மன்றம் சார்பில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.

Advertisement

தொடர்ந்து முனைவர் மல்லிகா தலைமையில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல், பவானி, ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து மாணவிகள், பேராசிரியர்கள் என வீணை இசை கலைஞர்கள் என ஏராளமானவர்கள் வீணை வழிபாட்டில் பங்கேற்றனர்.

அப்போது மழை பெய்ய வேண்டியும் , உலக நன்மை வேண்டியும், மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வி பெறவும் வீணைப்பாடல்கள் பாடப்பட்டன.  இதேபோன்று விநாயகர் பாடல் உட்பட 22 பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கபட்டன.  வீணை இசை வழிபாட்டை பக்தர்கள், மாணவ மாணவியர்கள் , பெற்றோர்கள் இசை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் போன்ற பெரும் நகரங்களில் போர் நடைபெற்று வரக்கூடிய வேளையில் மதுரையில் அமைதி வேண்டி இத்தகைய வீணை இசை வழிபாடு நடைபெற்றது.  மேலும் பழமை மாறாமல் பாரம்பரிய உடை அணிந்து பெண்கள் ஒன்று கூடி நவராத்திரி திருவிழாவான நேற்று வீணை இசை வழிபாடு நடத்தினர்.

ரூபி.காமராஜ்

Tags :
#participates many devoters108 veenaiMadurai Districtprasanna venkatesa perumal templeveenai musicVijayadashami special
Advertisement
Next Article