Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மறைந்த முன்னாள் அமைச்சர் மனைவியின் சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

01:20 PM Nov 20, 2023 IST | Web Editor
Advertisement

மறைந்த முன்னாள் அமைச்சர் அ.ம.பரமசிவனின் மனைவிக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவன் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பரமசிவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், நல்லம்மாளுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் சிறப்பு நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்திருந்தது.

கடந்த 2000ம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை எதிர்த்த மேல்முறையிட்டு வழக்கு நிலுவையில் இருந்த போது, முன்னாள் அமைச்சர் பரமசிவன் 2015-ல் காலமானார்.  இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.  அத்துடன் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
ADMKADMKMinisterExMinisterjudgementMadrasHighCourtNews7Tamilnews7TamilUpdatesPrisonsentenceSpecialCourtTamilNadu
Advertisement
Next Article