Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

07:06 AM Apr 25, 2024 IST | Web Editor
Advertisement

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக
லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு
மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2021 - 23ம் ஆண்டுகளுக்கு இடையில் 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய 1182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது.
டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் , இதுசம்பந்தமாக லஞ்ச
ஒழிப்பு துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்
எனக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர், டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளதால், உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, தலைமை
வழக்கறிஞர் பி.எஸ். ஆஜராகி, மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென
கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு குறித்து பொதுத்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Tags :
EBelectric boardgovtTenderTN GovtTransformer
Advertisement
Next Article